சந்திப்பு
கூடுதேடி வந்த பறவை
இரைதேடி பறந்து விட்டேன்
தாய்மண்னே உன்மீது தடம் பதித்து
பறந்துவிட்டேன்
நீ செழித்திருக்கும் அழகை
கண்டு வியந்துவிட்டேன்
சிறுத்து போன விவசாயம்
கண்டு கலங்கிவிட்டேன்
சத்தம் இல்லாது கிடந்த
ஆறே,
நீ, சலசலத்து ஓடும் போதே கண்டுவிட்டேன்
மண்ணுமேல ஆசைவச்சே
இருந்துவிட்டேன்
கடசிவரை உண்ணை கண்டு கரைஞ்சிவிடடேன்
அட காதோரம் சொல்லி
நான் பறந்து விட்டேன் .