அமிர்த கணேச

அமிர்த கணேச
அமிர்த கணேச
அமிர்த கணேச
அமிர்த கணேச
பதம்;-
அமிர்த கணேச- அமுத கடத்தை உடைய கள்ளவாரணப்பிள்ளையாரே
அமிர்த கணேச- அமிர்த அக நேச-அமுதைப்போல் அகத்தால் நேசிக்கப்படுபவனே
அமிர்த கணேச-அமிர்த கண நேச-அமிர்தம் உண்ட சிவகணங்களால் நேசிக்கப்படுபவனே
அமிர்த கணேச- தமிழ்தா கணேச(தமிழுக்கும் அமுதென்று தானே பெயர்)
இதனை மற்றைய மூன்றடிகளிலுள்ள அமிர்த என்பதை அமிழ்து என்று கண்டு அமிழ்(து) அமிழ்(து) அமிழ்(து)= தமிழ் என்று பொருள் கொள்க
பொருள்;- அமுத கடத்தை உடைய கள்ளவாரணப்பிள்ளையாரே, அமுதைப்போல் அகத்தால் நேசிக்கப்படுபவனே, அமிர்தம் உண்ட சிவகணங்களால் நேசிக்கப்படுபவனே, தமிழ்தா கணேச(தமிழுக்கும் அமுதென்று தானே பெயர்)
இது ஏகபாத மடக்கு
இது சிலேடையாக பாடப்பட்டது விளக்கத்தை புரிந்தோர் தயவுசெய்து கருத்தாய் பதியவும்