நட்பு

மிகச் சாதாரணமாக தினசரி
கடந்துவிடும் எண்ணிலடங்கா
முகங்களைப்போல்
உன்னை என்னாலும்
என்னை உன்னாலும்
ஏனோ கடந்துவிடமுடியவில்லை
உன்னைப் பற்றி நினைக்கையில்
எனக்கொரு புன்னகையும்
உனது ஒரு புன்னகையில்
என்னைப் பற்றிய நினைவும்
தொற்றிக்கொண்டிருப்பது ஏனோ
நாம் கொண்ட நட்பால் தான்