இரைச்சல்

இறைவன் கனவில் வர

வினா ஒன்று எழுப்ப ஆசை

இசை யாது என்றேன்?

இயற்கை என்றான்

கனவு கலைய

தேட ஆரம்பித்தேன் இசை எது என


நாய் குரைத்தது

நன்றி என்ற ராகம் கேட்டேன்

காகம் கரைந்தது

ஈகை எனும் ராகம் கேட்டேன்

பசு கத்தியது

பாசம் என்ற இசை கேட்டேன்


குயில் கூவியது

மயில் ஆடியது

இலைகள் மேளம் கொட்டியது

அலைகள் தாளம் தட்டியது

இன்னும் எத்தனை எத்தனையோ

எல்லாமே இசைக்கின்றன


மனிதா......

உன் குரலில் மட்டும்தான்

இரைச்சல் கேட்கிறது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (19-Sep-15, 8:38 pm)
Tanglish : iraaichal
பார்வை : 61

மேலே