ஆயுசுக்கும் சாவாட்டம்

கண்ணமூடி நடக்காதடா- இது
காடல்ல பெருநாடுடா...
ரோடெல்லாம் குழி தானடா- நீ
கேட்டாக்கா, சுடுகாடுடா....

பணம் இருப்பவன்
பெரியாளுடா...
துணை இருப்பவன்
நரி போலடா.....

குணம் மட்டும் போதாதுடா
அதை வைச்சு
கடன்வாங்க முடியாதுடா....

பொய் சொல்ல கத்துக்கோடா...
மெய் கூட பொய் தானடா...
தை மாசம் பொறந்தாக் கூட
வழி ஒன்னும் பொறக்காதுடா....

கேட் அடைச்சே
வாழறானடா - இந்த
நகரம் கூட வேற
கோளுடா....

கிரிக்கெட்டே
வேதமாச்சுடா...அது
மதி கெடுக்கும்
பூதமாச்சுடா....

எல்லாத்தையும் கலக்கறானடா- அட
அதுல கூட கலப்புதானடா...
கத்திரிக்கா திண்ணாக் கூட -அது
தற்கொலைக்கு சமம்தானடா....

மணல் அள்ளி
மலடாக்கிட்டான்- கேட்ட
மனுஷனையும்
மணலாக்கிட்டான்....

காச குடுத்து ஜனம்
வாங்கிட்டான்
காசுக்காக ஜாலம்
தீர்த்துட்டான்....

இங்கிலீசு வாய் மொழி
லஞ்சம் தான் புது வழி...
புரட்சி பண்ணும் நாமெல்லாம்
முகநூலுக்கு தினம் பலி....

கொண்டாட பீர் இருக்கு
திண்டாட நாள் இருக்கு
தீ மிதிக்கும் கூட்டத்துல
கருகாத மீசருக்கு.....

கற்புக்கு நம்ம நாடு
ஆனாலும் கெடுத்துருவோம்...
கர்சீப்பு மறைப்பு கூட
கல்ச்சர்ன்னு படைச்சிருவோம்....

காசு குடுத்து லைன் கட்டி
மசிரு குடுக்க போராட்டம்....
மசுரே போச்சுன்னு மாலைக்குள்ள
கடவுளோட பொம்மலாட்டம்...

செத்தவன் கணக்கு இழுத்தடிக்க
சினிமா படம் சீக்கிரம் வரும்...
சொன்ன தீர்ப்பு கூட காரி துப்பி
கொன்னு போட சீறி எழும்...

சீரியலு நொன்னை பேச்சு
வெட்டியாச்சு விளங்கா குடும்பம்...
வீதியெல்லாம் தண்ணி சண்டை
வெட்டி நியாயம் கூரை மேயும்...

கன்னத்துல கை வைச்ச
கிழவன் போல ஒத்தை உலகம்...
கிளை உடைஞ்சு சாவட்டும்
போயிருவோம் வேற கிரகம்...

எல்லாத்துக்கும் போராட்டம்
என்ன பண்ண வாழ்வாட்டம்....
அடுத்த நிமிஷ வாழ்க்கைக்கு
ஆயுசுக்கும் சாவாட்டம்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Sep-15, 12:35 pm)
பார்வை : 94

மேலே