யார் ஈடு

சில காலிமனைகளுக்குப் புனரமைப்பு
பல வளர்ந்த மரங்களுக்கு வாய்க்கரிசி
குல மிருந்தமிடம் அகன்றே பறவை பூச்சி
நல மழிந்து நாடிடும் வேறிடம் நோக்கி

களமிறங்கிய கொத்தனார் வாழ்விலும்
வளம்பிறக்க செடி நட்டிடுவர் கான்கிரீடில்
சட்டங்கள் பல மரத்தில் தாங்கியும்
சட்டங்கள் பல மறைவில் மீறியும்....

முடிவில்.......

அழிக்கப் பட்டவைகளுக்கு யார் ஈடு ...?

எது ஈடு....?

----- முரளி

எழுதியவர் : முரளி (21-Sep-15, 11:42 am)
சேர்த்தது : முரளி
Tanglish : yaar eedu
பார்வை : 65

மேலே