நீ யாரென்று புரியவில்லை

இப்போதும் புரியவில்லை
நீ யாரென்பது

என்னைப் புரியாத எனக்குள்
ஏதே ஏதோ பண்ணுகிறாய்

பூமிக்கு நிலவு
குடைப் பிடிப்பதாய்ச் சொல்கிறாய்

வசந்தக் காலங்களின்
வரவின் வாசலைச் சொல்கிறாய்

இதயம் நிற்காத
ரகசியம் பகர்கிறாய்

இசை என்பது
காதலின் தூது என்கிறாய்

ஓவியம் என்பதாய்
உன்னைச் சொல்கிறாய்

களவுப் போன
உறவுகளை மீட்கிறாய்

கனவென்பது நிஜங்களின்
நிழல் என காட்டுகிறாய்

தேடித் தொலைந்த
சுகங்களின் முகவரித் தருகிறாய்

தேடாத இடமெல்லாம்
காலுக்கு அடியில் காட்டுகிறாய்

,கடலும்.காற்றும் ,நெருப்பும்
பூமியும் வானமும் ஒன்றென்கிறாய் .


ஒருதரமும் புரியாத ஓராயிரம் காதலை
ஒரே வரியில் வாசிக்கிறாய்

இப்போதும் கேட்கிறேன்
நீ யாரென்று புரியவில்லை !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (21-Sep-15, 11:31 am)
பார்வை : 662

மேலே