அன்பில் தோய்த்த அம்பு
அன்பில் தோய்த்த
அம் பொன்றெடுத்து
இதயம் முழுக்கத்
துளைத்து விட்டாய்
சிதைத்ததை நீயே
அம்பது கொண்டே
வதைக்கப் பதைக்க
தைக்கின்றாய்
அன்பெனும் விஷமது
மனமுற்றும் பரவி
எனுள் நீக்கமறவே
கலந் திட்டாய் - இனி
தையலும் மருந்தும்
வீணே என்பேன்!
என்னில் உன்னைப்
பிரித் தெடுக்கும்
அன்ன மிருந்தால்
கூட்டி வா
உனக் கையமிருப்பின்
விரைந்து வா