நாய்கள் ஜாக்கிரதை
அந்த வீட்டில் 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற வாசகப் பலகையைப் பார்த்துவிட்டு மிகவும் கவனமாக அங்குமிங்கும் பார்த்தபடி மெதுவாக அடியெடுத்து வைத்து வாசல் கதவை எட்டியவுடன் அப்பாடா இவர்கள் வீட்டு நாயிடமிருந்து தப்பிவிட்டோம் என்ற பெருமூச்சு விட்டுக்கொண்டு வாசற்படி நிலைக்கு அருகே இருந்த அழைப்பு மணி பொத்தானை அழுத்தினேன். இவ்வளவையும் வீட்டினுள் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் உரிமையாளர் சிரித்துக் கொண்டே கிராதிக் கதவைத் திறந்துகொண்டு ஏன் இவ்வளவு பயம் என்றார்
நான் வாசகப் பலகையைச் சுட்டிக் காட்டினேன்.
அவரோ நகைத்துக்கொண்டே, நாய்களைத்தானே ஜாக்கிரதையாக வரச் சொல்லி எழுதி இருக்கிறது உங்களை இல்லையே என்றார்
நான் ??????????????
__________________
வாழ்க வளமுடன்