கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் – முத்தொள்ளாயிரம் 71
நேரிசை வெண்பா
(க மோனை, ய் இடையின ஆசு, ய எதுகை)
கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் - மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடுமென் தோள்! 71
– முத்தொள்ளாயிரம், பாண்டியன்
பொருளுரை:
கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்களைக் கையில் அணிந்து கொண்டிருக்கிறேன்.

