பூக்கள்

பூக்களின் இதழ்களிலே

புதுக்கவிதை எழுதி வைத்தேன்


புதுக்கவிதை எழுதி வைத்துப்

பூமாலை எதிர் பார்த்தேன்


பூமாலை காட்டவில்லை

புகழ்வானை எட்டவில்லை


இன்று...என்

புதுக்கவிதை அச்சேற்ப


பூவெல்லாம் சரமாச்சு

மனமெல்லாம் மகிழ்வாச்சு

எழுதியவர் : ஜெறின் (29-May-11, 7:20 am)
சேர்த்தது : Jerin Ross
பார்வை : 535

மேலே