துரதிர்ஷ்டம்

ஒருபாதை
வழியே அனுப்பிய அழைப்பு
வானத்தில் மோதியே திரும்பியது.
வேறு எந்த பாதையும்
புரியவில்லையே...

காலத்தை
கடந்து செல்லும் வாழ்நாளில்
தனிமை ஒரு பாட புத்தகமானது.
விரைவாக பரீட்சை
நாளும் உண்டானாதே...

உறக்கத்தை
குறைவாக பெற்ற இரவில்
குறுகிய கனவுகள் ஆழமானது.
அதிகாலை விடியுமுன்
கண்கள் கலைத்ததே...

தாகத்தை
தீர்த்திட கால்கள்
வெகு தூரம் பயனமானது.
காணல் நீரானதும்
பார்வையும் பொய்யானதே...

முகத்தை
திருப்பிக்கொண்ட வேளை
மெதுவாக சுவாசம் சென்றடைந்தது.
நிழலானாலும் இனி உடலும்
கேள்வி கேட்குமே...

எழுதியவர் : இத்ரீஸ் (22-Sep-15, 12:27 pm)
பார்வை : 185

மேலே