காதலியே

காதலியே
உன் உயிர்கூட்டின்
ஓரத்தில் நான்
உறங்க இடம் கொடு.........

விடியும் வரை
மடியில் கிடத்து
விடிந்த பின்
மார்பில் கிடத்து..........

உன் புருவ பொட்டுக்குள்
புதைத்து வை
உன் உதட்டு சிரிப்பில்
உயிர் கொடு.......

என் தனிமைக்குள்
உன் நினைவுகள்
ஊற்றி நிரப்பு
என் சுயத்துக்குள்
வந்து சுகந்தம் பரப்பு.....

என் ஆண்மையின்
அர்த்தம் உணர்த்து
ஐம்புலன்கள் அடக்கி
ஆட்சி செய்.......

அந்திவானம் அவிழ்ந்து
விழுமளவிற்கு அன்பு செய்
என் கர்வம் கலைத்து
காதல் கொள்.......

ஒவ்வொரு நாளும்
அழ வை
அழும் ஒவ்வொரு
முறையும் அணைத்து கொள்.......

நீ நிலவாக வேண்டாம்
என் வாழ்கைக்கு
வானமாக வா......

உன் அன்பில்
ஆயுள் கைதியான எனக்கு
இறக்கும் வரை
இதே நிலை தான் என்று
இறுதி தீர்ப்பு எழுது.....

எழுதியவர் : வேலு வேலு (22-Sep-15, 4:55 pm)
Tanglish : kathaliye
பார்வை : 236

மேலே