அவள் அப்படியே

ஆண்டுகள் கழிந்தும்
அவளை அப்படியே
அடையாளபடுத்துகிறது

என் பருவம் திருடிய
அவளின் புருவம்!!!!

அதோ
சன்னல் ஓர
சந்திரன்!!!!!

அது அவளே தான்
ஆனால்
பள்ளி பேருந்து
பருவம் அடைந்து
கல்லூரி பேருந்தாய்
காட்சி அளிக்கிறது!!!!

அந்த கண்களின்
அதே தேடல்!!!!

அந்த சிவந்த
உதடுகளில் இருந்து
சிதறும் அதே சிரிப்பு!!!!

யாரையும்
கண்டு கொள்ளாத
அதே கர்வம்!!!!!

அது அவளே தான்!!!!

அவள் அவளாக தான்
இருக்கிறாள்
நான் தான் நானாக
இல்லை!!!!

வெளிச்சத்தை
தொலைத்த
விட்டில் பூச்சியாய்!!!!

கொதிக்கும் சூரியனில்
குதித்த மழைத்துளியாய்!!!!

இருந்து கொண்டே
இறந்து கொண்டு
இருக்கிறேன்.............

எழுதியவர் : வேலு வேலு (23-Sep-15, 2:42 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : aval appadiye
பார்வை : 56

மேலே