ருசிகண்ட பூனை - ஹுண்டாய்

சென்னையில் நான் வங்கியில் வேலை செய்த போது, கூட வேலை செய்த நண்பருக்கு Jeyakumar Sabapathy வேறொரு வங்கியில் இருந்து கால் வந்தது. . சென்னை ஹுண்டாய் ஃபாக்டரியில் ஒரு மீட்டிங். என் நண்பர் போனார்.

அப்படியே அந்த ஃபாக்டரியை சுத்தி பார்த்துவிட்டும் வந்தார். உயரமாய் எதுவுமே கட்டாமல்.. நீளவாக்கிலேயே பாக்டரியை கட்டி.. முடிந்தவரை அந்த தொழிற்சாலைக்கு நிலம் என்பதை விட, நிலத்துக்கு தொழிற்சாலை கட்டி இருப்பது மாதிரி இருக்கிறது என்று சொன்னார். நிலத்தை விற்று கழகக்கண்மணிகள் காசு பார்த்ததை சொல்லி வேறு சலித்துக்கொண்டார்.

இந்த நிறுவனத்துக்கு முதலில் 5 வருடம் எல்லாமே ஃப்ரீ. தண்ணீர், மின்சாரம், அப்புறம் எல்லாவித எக்ஸ்போர்ட் இம்போர்ட் செய்யும் போர்ட் ஹான்ட்லிங் எல்லாமே ஃப்ரீ. இவர்கள் பல லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்தார்கள்.

எல்லாவற்றிற்குமே வரி விலக்கு. அதற்கு வரி போட்டாலே 5000 கோடி குறைந்த பட்சம் வரும். அந்த ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்த போது.. சென்னை போலீசுக்கு சுமார் 6 கோடி விற்பனை மதிப்புள்ள.. ஓய்ந்து போன பழைய அக்சென்ட் கார்களை ஹுண்டாய் இலவசமாய் தந்தது. NYPD மாதிரி நம் போலிஸ் ஆட்கள் இதில் பயணம் பண்ணும்போது கெத்தாய் போனார்கள். அப்புறம்... அம்மா மீண்டும் இலவசம் 5 வருடம் தர, இரண்டாவது தொழிற்சாலையும் அமைந்தது.. மறுபடியும் முதலில் இருந்து..

இப்போது ருசிகண்ட பூனை.. மூன்றாவது தொழிற்சாலையை தொடங்க இடம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி எதுவும் படியாமல்.. ஃபோர்டு கம்பனி குஜராத்துக்கு போனது இன்னொரு கதை. இனிமேல் தொழில் தொடங்க.. எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் பணமும் கேளுங்கள். அரசு கொடுத்தாலும் கொடுப்பார்கள். பதிலுக்கு நீங்கள்.. ஆட்டோவை இழுத்துவிட்ட மாதிரியோ, மீன்பாடி வண்டி மாதிரியான கார்களை இலவசமாய் கொடுத்தால் போதும்.12500 கோடிக்கு மேல் தமிழ் நாட்டுக்கு எள்ளுகொடுக்கலாம்.

ஐடியா பொறி: மணி மொழி கதிர். Manimozhi Kathir

எழுதியவர் : செல்வமணி - இணையம் Prakash Ramaswami (24-Sep-15, 8:20 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 113

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே