தளிர்கள்

1
“எனது பாடல்கள் எங்கே?” இறைவன் கேட்கிறான்
மழலைகளின் புன்னகைகளைப் படிப்போம் வாருங்கள்

2
தீ…தீ.., வாழ்க்கை…. வாழ்க்கை

3
பாதைகள் பல உள்ளன….
இலக்குகள் முடிவாக வில்லை

3
மன்னனாக விரும்புகிறேன், நான்
மறுபிடியும் மழலையாக வேண்டும்

4
அவனது இரவுகளுக்கு ஒளி உண்டு
அவன் கவிஞ்ன்

5
கேட்க்க மாட்டார்கள், பார்க்க மாட்டார்கள்
திருந்தமாட்டார்கள்… எல்லோரும் மனிதர்கள்

6
மலையொடு மோதிய தண்ணீர்
பலனின்றி வேறு வழி பார்த்துக் கொள்கிறது

7
தங்கங்கத்துக்கு மணமும் உண்டு
அது நல்லவரின் சிந்தனையோ?

8
ஒளி வந்தது
யாருடைய நல்ல எண்ணம் அது?

9
உதிரம் சுத்தீகரிக்கப்பட வேண்டும்
சிதனைகளே, செயல் படுங்கள்

10
காலமென்பது ஒலிக்கப் போகும்
இசைக்கு ஓசையில்லா எதிரொலியோ?

11
பூமியின் மொழியை
கற்கள் கேட்குமோ?

12
மாஹான்களே,
ஊமை, செவுடு, குருடர்கள் நாங்கள்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (24-Sep-15, 4:16 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
Tanglish : thalirgal
பார்வை : 60

மேலே