vaanam
அழகான மேகங்கள்
மெது மெதுவாய் மோதிக்கொள்ளும்
அண்ணாந்து பார்க்கின்ற
அதிசயம் உண்டென்றால்
பிரபஞ்சத்தில்
வானமே நீ மட்டும்தானோ
கைக்கெட்டா தூரத்தில்
கண்பார்வை படும்படியாய்
பகலுக்கொரு சூரியனும்
இரவுக்கொரு சந்திரனுமாய்
எல்லைகள் ஏதுமின்றி
விரிந்தபடி செல்கின்றாய்
வியப்பில் ஆழ்த்த வைக்கின்றாய்
எட்டாத உயரத்தில்
சிறுதுளிகள் சேர்த்துவைத்து
மேகங்கள் மோதவைத்து
உனக்குள்ளே உள்வாங்கி
மின்னல் வைத்து
கன்பரித்து
மிரள வைக்கும் இடி இடித்து
மிதமான தென்றல் தனை
முறுக்கேற்றி சீறவைத்து
புயலாக்கி விடுகின்றாய்
இத்தனையும் ஆட்டுவிப்பாய்
என்றுதான் நீ
எங்கள் வசப்படுவாய்