பூமிக்கும் பாரம் வேண்டாம்

படிக்கும்வரை பெற்றோருக்கும், உறவுகளுக்கும் பாரமாய்;
வேலையில் அமரும்வரை நட்புகளுக்கு பாரமாய்;
வாழும்வரை மனைவிக்கும், மகனுக்கும் பாரமாய்;
நான் உயிர்க்கும்வரை மண்ணுக்கும் பாரமாய்ப் போவதெப்போது?

பாரமாய் இருந்தது போதும்,
இனி பூமிக்கும் பாரம் வேண்டாம்!

விவிலியம் முதலாய், இணையதளத்திலுமாய்,
சான்றோர், சபையோரையும் கேட்டேன்.
பாவமில்லை என்றார்!

இறந்தபின் வாழ்வு உடலுக்கன்று - ஆன்மாவிற்கே!
ஆறடி பிறன் நிலமும் வேண்டாம்!
அதனால் கடனும் வேண்டாம்!

எரித்திடுவீர் என்னுடலை,
எச்சத்தை என் கிராம வீட்டிலே,
வைத்திடுவீர் வீட்டு வாசலருகே;
குவளையிலே - சுவற்றினிலே!!!

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (25-Sep-15, 12:28 pm)
சேர்த்தது : Patrick Koilraj
பார்வை : 2914

மேலே