நடுக்கூடம்

பவ்யத்தோடு
பரிமாறப்பட்ட
தேநீர் கோப்பைகளும்
சிறு பலகாரங்களும்
காலியாயின –
வழக்கம்போல்
இனி -
முப்பத்திரண்டு வயது
கன்னியிடம்
முப்பத்தாறாவது
பேட்டியும் தொடர்ந்து
பேரம் பேச்சுக்களும்..

எழுதியவர் : ஜி ராஜன் (25-Sep-15, 12:33 pm)
பார்வை : 107

மேலே