நெருங்கி வராதே

நெருங்கி வராதே நெஞ்சமெல்லாம் வலிக்குதே
நெருங்கி வராதே

தினம் தினம் நினைக்றேன் விலகத்தான் முயல்கிறேன்
நெருங்கி வராதே

தனிமையில் சிதறியே போகிறேன்
நெருங்கி வராதே

தன்னந்தனி உலகிலே தனிமையாய் வாழ்கிறேன்
நெருங்கி வராதே

என் தவிப்புகள் புரிவது மிக கடினமே
நெருங்கி வாராதே

நெஞ்சுக்குள்ளே குத்திவிட முட்செடியே
நெருங்கி வராதே நெஞ்சம் கொல்லாதே

நினைவுகள் வலிக்குதே நிமிடமும் கசக்குதே
விட்டு பிரியாதே

நிரந்தரம் எதுவுமில்லை என் அன்பினை தவிரவே
மறந்து போகாதே!!

வலியிலும் சிரிக்கிறேன் கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
வாட செய்யாதே விலகி செல்லாதே!!

-கவிதை பூக்கள்-

எழுதியவர் : மீனா தங்கதுரை (25-Sep-15, 4:20 pm)
சேர்த்தது : மீனா தங்கதுரை
Tanglish : nerungi varaathe
பார்வை : 214

மேலே