பன் மாடிக் கட்டிடங்கள்
பன் மாடிக் கட்டிடங்கள்
***************************************************
சலம் சார்ந்து பயிர் செழித்து இருந்துவந்த மருத நிலம்
மலமும் சலம் சார்ந்த பாழ் குழி ஆனதுகான்
குலமும் புலம் தழைக்க பரவி நின்ற உழு தொழிலை -- பண
பலம் கொண்டு அழித்ததுவே பன்மாடிக் கட்டிடங்கள்
பலமாடிக் குடியிருப்பும் நம்நாட்டில் பெருகிவிட
சலமட்டம் குறைந்ததுவே பலநூறு அடிகீழாய் !!