கவிஞன்
அவளுக்காக நான் எழுதிய
காதல் கடிதங்கள்,
என் புத்தகத்தில் கவிதைகளாகி விட்டன
இப்போதெல்லாம் என் கவிதைகளைத் தான்
அவள் விரும்பி படிப்பதாக
அவளுக்கும் எனக்கும் தெரிந்த
நண்பன் சொன்னான்.
இதை முன்பே அவள் செய்திருந்தால்
நான் கவிதை எழுதுவதை
நிறுத்தியிருப்பேன் அல்லவா!