இரு பக்கங்கள்
கனவோடு ஒரு கவிதை
கவிதையோடு ஒரு கனவு
காதலில் மட்டுமே இந்த இரு பக்கங்கள்
நினைவோடு ஒரு வாழ்வு
வாழ்வெல்லாம் அந்த நினைவு
காதலில் மட்டுமே இந்த இரு பக்கங்கள்
விழியோடு வழியும் கண்ணீர்
ஆனந்தத்திலும் துயரத்திலும்
காதலில் மட்டுமே இந்த இரு பக்கங்கள்
-----கவின் சாரலன்