குசும்பு காதலுக்கு வயசு இல்லை

எல் கேஜி கடைசி பெஞ்சில்
ரெண்டு பசங்க...
பய 1: மச்சான் நான் ரொம்ப
அப்சட்டா இருக்கேண்டா
பய 2: ஏண்டா மச்சான் என்ன
ஆச்சு? வீட்டுல ஏதாச்சு
பிரச்சனையா?
பய 1:இல்லடா, நேத்திக்கு toys
வாங்க கடைக்கு போய்
இருந்தேண்டா. அங்க ஒரு
செம்ம பிகர் டா. சும்மா
ஒன்றரை வயசு இருக்கும்.
அவங்க அம்மா மடியில படுத்து
வாயில விரல வச்சுட்டு
சிரிச்சா பாரு....ஐயோ
ஐயோ.....
பய2: அப்பரம் என்ன ஆச்சு?
பய 1: நானும் பலூன் எல்லாம்
வச்சு செம்ம சீன் போட்டேன்
மச்சி. ஆனா அவ கண்டுக்கவே
மாட்டேனுட்டா! ரெண்டு
நாளா நான் ஹார்லிக்ஸ் கூட
குடிக்கல தெரியுமா... அவ
என் அஞ்சலடா!
பய2: விடு மச்சி அவள
தொட்டிலோட
தூக்கிடுவோம்!

எழுதியவர் : செல்வமணி (26-Sep-15, 11:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 124

மேலே