என்னவளே

ஆறிலும் நீ
அழகாய்த்தானே இருந்தாய்
அறுபதிலும் நீ
அழகாய்த்தான் இருப்பாய்!
அழகும் வளரக்கூடியது தானே?
************
பூந்தோட்டத்திற்குச் சென்றால்
போர்வையொன்றை போர்த்திக்கொள்;
குழப்பமடையலாம் பட்டாம்பூச்சிகள்!
*******************
மேக்கப் போடாவிட்டாலும்
உனை இரசிக்கத்தான் போகிறேன்;
ஏதோ உன் அப்பாவுக்கு
என்னால் செய்ய முடிந்த உதவி!
*****************
உனக்காக ஒரு
காதல் கடிதம் கூட‌ எழுதியதில்லை;
ஆனால்,
எத்தனையோ
விடுமுறை விண்ணப்பங்கள் எழுதியிருக்கிறேன்!
*******************
எனது கைப்பேசியில் சில
ஆங்கில எழுத்துக்கள்
புதியதாய் இருக்கும்;
உன் பெயரை
எழுத உதவாதவைகளை எதற்கு
தொட்டுப்பார்க்க வேண்டும்?

எழுதியவர் : சுகுமார் சூர்யா (27-Sep-15, 12:14 am)
Tanglish : ennavale
பார்வை : 162

மேலே