மனித வாழ்க்கை --- பார்த்ததில் கவர்ந்தது

மனித வாழ்க்கை கீழ்க்காணும் மூன்று வகையானது.
1. பொது வாழ்க்கை
2. தன் வாழ்க்கை
3. இரகசிய வாழ்க்கை
1. பொது வாழ்க்கை :
ஒரு மனிதன், சமூகத்திற்காக வாழ்வது.பொது வாழ்க்கை.
2. தன் வாழ்க்கை :
ஒருமனிதன் தன் குடும்பத்திற்காக வாழ்வது தன் வாழ்க்கை.
3. இரகசிய வாழ்க்கை:
அதே மனிதன் தனக்குள் இருக்கும் ஒருவனுக்காக வாழ்வது இரகசிய வாழ்க்கை.
முதல் இரண்டு வாழ்க்கையிலும் அந்த மனிதனின் குணத்தையும் நடத்தையையும் வெளிக்காட்டுவது இந்த இரகசிய வாழ்க்கையின் பிரதிபலிப்பே ஆகும்.
எனவே இந்த இரகசிய வாழ்க்கையில் அந்த மனிதனின் குணங்கள் எவ்வாறு நல்ல திசையில் பக்குவபட்டிருக்கிறது,பயணிக்கிறது என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இரசிய வாழ்க்கையை ஒரு மனிதன் மிகச்சில விழுக்காடுகளே தன் பெற்றோரிடமோ அல்லது தன் துணையிடமோ பகிர்கிறான். எனவே அந்த திசையை மேம்படுத்தி வெற்றி பெறுவது அவரவர் கையில் மட்டுமே உள்ளது.
ஓர் உதாரணம். ஒருவர் தனியாக சாப்பிட்டு பழகியவர். யாருடனும் சேர்ந்து சாப்பிடும் பழக்கமில்லாதவர். சிறிது சிறிதாக அதையே தன் இரகசிய வாழ்க்கையில் பழகிவிட்டவர் தனக்கு திருமணமானவுடன் தன் பொது வாழ்க்கையில் , தன் வாழ்க்கையில் யாருடனும் சாப்பிடுவதை அசௌகர்யமாக உணருகிறார், தன்னை ஒளித்துக் கொள்கிறார் . புதிதாக திருமணமானவர் எத்தனை வீட்டில் சாப்பிட வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறீவீர்கள் தானே. அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாகும் உறவினர்கள் மத்தியில் ????.
ஆக இவரின் இரகசிய வாழ்க்கையின் ஒரு பழக்கம் தன் வாழ்க்கையில் நுழைந்த மனைவியையும், பொது வாழ்க்கையில் வரும் பொது நிகழ்ச்சிகளையும் எத்தனை கொடூரமாகப் பாதிக்கிறது.
இதைப்போல் பல உதாரணங்கள் நீங்கள் தினமும் பார்ப்பது இயல்பே.
இந்தக் குணங்களை எதிரில் இருப்பவர்கள் அடையாளம் கண்டு மேம்படுத்த உதவ முயற்சிக்கலாம். ஆனால் , இது இரகசிய வாழ்க்கையினை மேலும் பாதிக்கும் வாய்ப்பாக மாற முயற்சி செய்கிறது.
இதற்க்கு ஒரே தீர்வு , தானே உணர்ந்து மேம்படுத்தி கொண்டால் மட்டுமே நல்லது. எனவே இரகசிய வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என ஆராயுங்கள் , அதை நல்ல திசையில் மேம்படுத்துங்கள். நல் வாழ்க்கை நாளையே திறந்திடும் உங்களுக்காக ..........
பார்த்ததில் கவர்ந்தது ----- க. நஞ்சப்பன்