அந்தோனி தாத்தா - பேய் கதை

“ஏன்டா மாமா இந்த பேயிலாம் இருக்குனு நம்புறியா?”
“ஏன்டா இப்டி திடுதிப்புனு கேக்குற!”
“நேத்து, ‘எக்ஸார்சிஸ்ட்’னு ஒரு படம் பாத்தேன் மச்சி சும்மா மிரட்டிடானுங்க”
“சேரி அதனால இந்த திடீர் குவெஸ்டினா?, படம் தானே மச்சி, படத்துல எல்லாம் அப்டிதான் காட்டுவானுங்க, படம் ஓடனும்ல”
“அதுக்கு இல்ல மச்சி, நேத்து நயிட்டு, ஒன்னுக்கடிக்கலாம்னு கொல்லை பக்கம் போனேன், ஏதோ ஒன்னு பின்னால சட்டுனு வந்து போன மாதிரி இருந்ததுச்சி”
“பின்னால வந்துச்சா!, இல்லையே ஒன்னுக்கு முன்னால தானே வரும்!”
“மூடுடா!, அப்புடியே உடம்பெல்லாம் நடுங்கிடிச்சுன்றேன், காமெடி பன்ற”
“அப்டி இல்லடா, இருட்டுநாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கும், இதுல நீ பேயி படம் வேற பாத்துட்டு கொல்லைல ஒன்னுகடிக்க போனா பயம் வராம எப்புடி”
“அதான் மச்சி டவுட்டு, பேயே இல்லனா நாம ஏண்டா பயப்படனும், எனக்கு ஏன் உடம்பெல்லாம் நடுங்கனும்”
“மயிரு, சாமியே இல்லாம அவனவன் சாமி வந்தமாறி நடிக்கிறான், அது மாதிரி தான் இதுவும் மூடு”
“நீ என்ன வேனா சொல்லு, ஆனா பேயி இருக்கு நா நம்புறேன்”
“எப்புடிடா சொல்லுற?”
“அதெல்லாம் எனக்கு தெறியாது சாமியுமிருக்கு பேயுமிருக்கு!”
“பயமும், பக்தியுமமிருக்குனு ஒத்துக்கிறேன் ஆனா, பேயுமில்ல சாமியுமில்ல இத உனக்கெல்லாம் பேசி புரிய வைக்க முடியாது, நா கிளம்புறேன் ஆள விடு”
“இரு மச்சி, வேனா ஒன்னு பன்னலாம், வா இன்னைக்கு நைட்டு சர்ச் பக்கத்துல இருக்க கல்லரைக்கு போலாம்”
“போயி?”
“ப்ரேம் சொல்லுவான் தெறியுமா, அங்க டெய்லி நைட்டு செத்து போன அந்தோனி தாத்தா வருவாருனு. வா, போயி பாக்கலாம் எதுவுமே இல்லனா ஒத்துக்குறேன்”
“டேய்!, அவனே ஒரு புளுவுனி அவன் சொன்னதையெல்லாமா நம்புற! அதும் நாம பத்தாவது படிக்கிறப்போ அவன் சொன்னது அது!”
“சரி அவன விடு, சூசை போன மாசம் சொன்னான்ல, மீன் பிடிக்க கல்ற வாய்க்காலுக்கு போனப்போ பாத்தேனு, அதும் இல்லாம புடிச்சு வச்ச மீனையெல்லாம் எதோ தின்னு மீனுமுல்லு மட்டும் தான் மீதி இருந்ததுனு சொன்னான்”
“உனக்கெல்லாம் சொன்னா புரியாது, பேயி இருக்குனு நம்பிகிட்டே நைட்டு கல்றைக்கு கூப்பிடுற பாத்தியா, அந்த தைரியத்துக்கே வர்ரேன் போலாம்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, அதான் கூட நீ வர்ர இல்ல அந்த தைரியத்துல தான் சொல்லுறேன் வா போலாம். நைட்டு பன்னண்டு மணிக்கு கரெக்டா வந்துரு. வர்ரப்போ மூங்கில்ல ஒரு சிலுவை ரெடி பன்னி கொண்டு வா, அந்தோனி தாத்தா சமாதில அடிக்க போறேன்!”
“இது வேறையா!, சரி கொண்டுவாறேன்”
.
.
(பன்னிரண்டு மணி - கல்லறை)
“மாப்ள வா ரெண்டு பேரும் ஒன்னா போலாம், சிலுவைய கொடு நா அடிக்கறேன்”
“இந்தா”
“மெதுவா போ மாப்ள, எதாவது தெரியுதா?”
“ஒரு மயிரும் இல்லடா இப்பவாது நம்புறியா”
“இல்லடா, நீ அந்தோனி தாத்தா இடத்துகிட்ட போ”
“நா போயிட்டேன் வா!”
“மாப்ள கைலி அவுந்திருச்சுடா, எதோ அவுத்துவுட்ட மாறி இருந்ததுடா!”
“என்ன அந்தோனி தாத்தாதான் அவுத்துவுட்டாறா?. மூடிட்டு வாடா!”
“எனக்கென்னமோ இங்க என்னமோ இருக்குறமாறி தான் இருக்கு, இரு சிலுவைய அடிக்கிறேன், அடிச்சதும் போயிடலாம்”
“சேரி அடி”
.
.
சுற்றுமுற்றும் பார்த்தபடியே சிலுவைய அடிச்சுட்டு மேல எழும்பி, “போலாம்”னு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தோனி தாத்தா அவன் கைலியை பிடித்து இழுத்தார். பயத்தில் அவர் சமாதி மேலேயே மயங்கி விழுந்தான்.
.
.
.
.
.
தெளிந்து எழும்பியவன் தன் வீட்டுக்கட்டிலில் கிடந்தான், நண்பனும் உடனிருந்தான். சிலுவை அடித்து அவன் கைலி கிழிந்திருந்தது.

எழுதியவர் : நாகா (28-Sep-15, 11:00 am)
சேர்த்தது : நாகா
பார்வை : 204

மேலே