வறண்டே கிடக்கிறது

ஒற்றையடிப் பாதையெல்லாம்
தார்ச்சாலையாக மாறியிருக்க....

கேபிள் இணைப்பெல்லாம்
டிஷ்ஷாக மாறியிருக்க.....

அண்ணாச்சி கடையும்
சூப்பர் மார்க்கெட்டாக மாறியிருக்க....

பல கிராமங்களில் ஒரு பேருந்து கூட‌
இல்லாத நிலை...

பல கிராமங்களில் ஒரு நாளைக்கு
ஒரு பேருந்து என்ற நிலை மட்டும்
இன்னும் மாறாமல் அப்படியே...

எத்தனை மெட்ரோக்கள் வந்தாலும்
இந்நிலை மாறும் சேதி வருமோ?

இந்தியா எத்தனை டிஜிட்டல் ஆனாலும்
நம் கிராமத்து விவசாயின்
வயிறு நிறையுமா?

அவர்களது
வயலும்
வயிறும்
சாலையும் ஒன்றுதான்...
எப்போதுமே
வறண்டே கிடக்கிறது.....

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (28-Sep-15, 7:42 pm)
பார்வை : 1127

மேலே