தீதும் நன்றும் - 2
பொருளாதாரம்
திறம்பட அமையப்பெற
சாத்தியக் கூருகளை
இந்தியா என்றோ அடைந்து விட்டது.
கனிமவளங்கள், அறிவாற்றல்,
அறிவியல் வளர்ச்சி, அயலகதொடர்பு,
மொழி வலிமை, உழைக்கும் வர்க்கம்
எல்லாம் இங்கே அமையப்பெற்றோம்,
ஆட்சியாளர்கள் கையில்
அங்குசத்தை கொடுத்து விட்டோம்.
எல்லாம் இருந்தும்
செய்வனவற்றை செவ்வனே செய்து
பாமரன் வாழ்வினில் ஒளியேற்ற வேண்டிய
அரசு என்ன செய்கிறது?
பணம் இல்லையென்று
தரணியெங்கும் பவனி வந்தால்
புதிய திட்டங்கள் (ஏதும் இதுவரை இல்லை)
மட்டிலும் தினம் கண்ணுற்றல்
அரசின் ஆளுமை ஆகுமோ?
அதுவே இனியும் செய்தல் அடுக்குமோ?
கணிணி மயமாக்கலில் காட்டுகின்ற ஆர்வம்
தாரளமயமாக்களில் காட்டுகின்ற அவசரம்
கனிம சுரங்கங்களில் காட்டப்படாதது ஏனோ?
அரசு இயந்திரம் முடுக்கி விடப்படாதது ஏனோ?
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
ஒரு முதலமைச்சர் செய்வதையே (துளி)
பிரதமராய் செய்கையில் வேறென்ன நாம் காண?
விடைகள் எங்கே வினாக்கள் இங்கே?