எல்லைப் போலி - தேன்மொழியன்

எல்லைப் போலி
~~~~~~~~~~~~
போலி முகத்தில்
வேலி அமைத்து
பரணி ஒன்றில்
பவனி வருவோம் ...
நிழலின் நிறத்தில்
பகலை அடைத்து
ஊழல் உடலில்
உயிரை விதைப்போம் ...
கதவின் இடுக்கில்
காமம் துரத்தி
காதல் உணர்வில்
மலடாய் திரிவோம் ..
- தேன்மொழியன்