நாட்குறிப்பு
என்னுடைய
ஒவ்வொரு ஆண்டு..
நாட்குறிப்பின்
எல்லாப் பக்கங்களிலும்
நீயே ..
நிறைந்திருக்கிறாய்..
எழுதப்படாத
வார்த்தைகளாய்..
எனக்கு மட்டுமே தெரியும்படியாக..!
..
அதில் சிதறிக் கிடக்கும்
உண்மைகளில் ..
என்றும் நீ..
புன்னகை சிந்தி
வாழ்கின்றாய்!
..
தொலைந்த எனது
அத்தனை நிமிடங்களும்..
அந்தப் பக்கங்களில் தான்
இருக்கின்றன..
என்றாவது ஒரு நாள் ..
உன்னை மீண்டும் பார்க்கும் போது
அந்தப் பக்கங்களை உன் பார்வைக்கு
பரிசளிக்கிறேன்..!