காதலுமிங்கு சுகம்தேடின
.."" காதலுமிங்கு சுகம்தேடின ""...
அகம்பாவம் கரைந்தோடின
ஆசைகள் ஓடிந்தோடின
இன்பங்கள் இடிந்தோடின
ஈகையும் தெறித்தோடின
உண்மைகள் மடிந்தோடின,,,
ஊக்கமும் உடைந்தோடின
எண்ணங்கள் கலந்தோடின
ஏளனங்கள் கடைந்தோடின
ஐக்கியமோ அழிந்தோடின
ஒற்றுமையும் ஒழிந்தோடின,,,
கனவுகள் கலைந்தோடின
காகிதமும் அழுதோடின
கவிதைகள் பிறந்தோடின
கவலைகள் பினைதோடின
கண்ணீரும் இணைந்தோடின,,,
காலங்கள் உருண்டோடின
காயங்கள் புரையோடின
வேதனைகள் வேரூன்டின
சோகங்கள் நிலைத்தாடின
காதலுமிங்கு சுகம்தேடின ,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

