இக்கரை தெரிய அக்கரை தேவை
கடலில் இரண்டு மீன்கள்
பேசிக் கொண்டன.
கடல் மிகப் பெரியது
என்றல்லவா கூறுகிறார்கள்,
என்றது ஒரு மீன்.
நம் முன் பார்
கடல் மிகச் சிறியது
என்றது மற்றொரு மீன்.
இரண்டு மீன்களுமே
ஒரு மீனவனின் வலையில்
மாட்டிக் கொண்டது.
வலை தண்ணீருக்கு மேல்
இழுக்கப்பட்ட போதுதான்
இரு மீன்களுமே புரிந்து கொண்டது
கடல் எல்லை பெரியதென்று.