வெற்றி உனதே
=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...
அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...
=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...
=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...
=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...
=> எண்ணங்கள்
உயர்ந்ததாக இருக்க
தேவையில்லை...
உறுதியானதாக இருந்தால்
போதும்...
=> இலட்சியத்தை
அடைய
நம்பிக்கை மட்டும்
போதாது!...
தன்னம்பிக்கையும்
வேண்டும்!...
=> முயற்சி மட்டும்
போதாது!...
விடாமுயற்சியும்
வேண்டும்...
=> வாழ்க்கைக் குதிரையில்
கடிவாளமிடப்பட்டக் கடமையை
விடாமுயற்சி என்னும்
விரைவுடன்
இலக்கைக் குறி
வைத்துப் பார்
வெற்றிப் பாதை
உனதே!!!...