தன்னம்பிக்கை
உறவாடி கைவிடும்
உறவுகள் வேண்டாம்.!
உழைக்க தூண்டும்
எதிரிகள் வேண்டும்.!!
பாராட்டி பேசும்
வார்த்தைகள் வேண்டாம்.!
பண்புள்ளவனாக மாற்றும்
ஏச்சுக்கள் வேண்டும்.!!
சோம்பேறியாக்கும்
வெற்றிகள் வேண்டாம்.!
கற்றுக் கொடுக்கும்
தோல்விகள் வேண்டும்.!!
வீழ்ந்தால் தூக்கிவிடும்
கரங்கள் வேண்டாம்.!
தானே எழும்
தன்னம்பிக்கை வேண்டும்.!!