சத்தியமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சத்தியமூர்த்தி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 03-Jan-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 253 |
புள்ளி | : 31 |
இந்த இருள் சூழ்ந்த இரவு
என்னை உறங்க அழைக்கிறது..
ஆனால்,
என் உள்ளமோ உறங்க மறுக்கிறது..
இமைகள் மூடிக் கிடந்தாலும்!
உயிர் முழித்து கிடக்கிறது!
உன் பெயர் சொல்லி கண்ணீர் வடிக்கிறது!
உன்னை கனவில் மட்டும்
காதல் கொள்கிறேன்..
காலை கண் விழித்ததும்
காயம் கொள்கிறேன்..
உன் நினைவால்!
நேசம் கொண்டவர்களின் நினைவுகள்
மனதில் ஓடிக்கொண்டே தான் இருக்கும்
உன் நினைவுகளை நிறுத்த வேண்டுமெனில்
என் சுவாசத்தை நிறுத்த வேண்டும்!!!
❤சேக் உதுமான்❤
ஆயிரம் கற்பனைகளோடு
காத்திருக்கும் இளைஞனை
ஓர் - ஒப்பனை
காலி செய்து விடுகிறது.!
ஆகையால் - தடை செய்
பியூட்டி பார்லரை.!
உன் இருண்ட கருவறையில் இருக்க நான் என்றும் அஞ்சியதில்லை
ஆனால் இன்று,
வெளிச்சம் கண்டும் அஞ்சுகிறேன்
கல்லறைக்கு நீ சென்றுவிட்டதால்
அம்மா...
மீண்டும் உன் கருவறைக்குள்
வந்துவிட வழி சொல்லு
இல்லையென்றால் என்னையும்
உடன் அழைத்துச்செல்லு..!
நானும் பூ இனத்தை
சார்ந்தவன்தான்..!
ஆனாலும் - அவள்
தலையில் சூட
மறுக்கிறாள்.!?
காதல் தோல்வியால்
கண்ணீர் வடித்தது
காலிஃபிளவர்..!
கார்பரேட்
கம்பெனிகளால்
களவாடப்பட்டது
இயற்கை வளம்.!
உச்ச நீதிமன்ற
தீர்ப்பினால்
களவாடப்பட்டது
கலாச்சாரம்.!
மதவாதிகளால்
களவாடப்பட்டது
சகோதரத்துவம்.!
அரசியல்வாதிகளால்
களவாடப்பட்டது
சுதந்திரம்.!
சுதந்திர நாடுதான்
ஆனாலும் இன்னும்
தனியவில்லை
சுதந்திரதாகம்.!!
கடல் அலையாய்
இரண்டொரு
நொடிகள்
காதலின்
பாதம்
தொடுவது
சுகம் தானே....!!!
வண்ணப் பொட்டாய்
அவள் நெத்தியில்
முத்தமிட்டு
ஒட்டிக் கிடப்பது
சுகம் தானே....!!!
வாடிய பூவானாலும்
அவள் சூடிய பூ நான்
என்றால்
சுகம் தானே.....!!!
வெட்டி எறியும்
நகமானாலும்
அவள் விரலால்
வெட்டுண்டு
வீழ்வது
சுகம் தானே....!!!
சுகம் தானே!!!
சுகம் தானே!!!
காதலியின்
நினைவுகளும்
சுகம் தானே....!!!
காதலியின்
நினைவில்
வாழ்வதும்
சுகம் தானே....!!!
சுகம் தானே...!!!
சுகம் தானே....!!!
காதலிக்காக
வாழ்வதும்
சுகம் தானே.....!!!
காதலிக்காக
வீழ்வதும்
சுகம் தானே......!!!
காதலுக்காக
வாழ்வது
சிகப்பு ரோஜாவே உன் மெல்லிய இதழ்கள்தான்
என் காதலியின் குணமே
உன் வாசம் தான் என் காதலியின் புன்னகையே
உன்னிலிருக்கும் தேன் தான் என் காதலியின் வார்த்தைகளே
உன் மேனியின் நிறம்தான் ரத்தத்தின் நிறமே
ரத்த ஓட்டம் இல்லையென்றால் உயிர் இருக்காதே - அதுபோலத்தான்
காதலி நீ இல்லையென்றால் காதலன் என் உயிர் இருக்காதே
என்று உணர்த்தவே உன்னை என் காதலிக்கு பரிசாக கொடுக்கிறேன் !!!
மாமிசம் சாப்பிடுவதில்லை
இயற்கை உணவு அளவோடு
உண்ணுகிறேன்..!
தினந்தோறும் நடைபயிற்சி
கையினை அசைத்து
உடற்பயிற்சி - ஆனாலும்
குறைந்தபாடில்லை உடம்பு.,
அழுது புலம்பியது
யானை..!!
ரௌத்திரம். .....பழகு !
- - - - - - - - - - - - - - - - - - - -
மென்மையில் புவிதழ்
மேன்மையில் சிகரம்
தண்மையில் அருவி
தவிர்ப்பில் தாமரையிலை
எரிப்பதில் தணல்
கரிப்பதில் எண்ணெய்
நிமிர்வதில் மரம்
தாழ்வதில் கடல்
சுடுபட்ட தங்கம்
அடிபட்ட வைரம்
எழுதப்பட்ட புத்தகம்
வடிக்கப்பட்ட பாத்திரம்
பொறுமையில் பூமி
புன்னகையில் நிலவு
நிறுவுகையில் வானம்
நெருப்பில் மழை
கற்பில் கண்ணகி
காதலில் தமயந்தி
வாழ்க்கையில சாவித்திரி
வம்சத்தில் சந்திரமதி
அணைப்பில் தாய்மை
வனப்பில் வாய்மை
குணத்தில் புலமை
இனத்தில் பெண்மை
இருக்காதா பின்னே
ரௌத்திரம்
பழகு என்று
ஏனிதற்க
உன்னை
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!
காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!
உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943
"ரவி இருக்காங்களா....?"
"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."
"ஓ...மை காட்....!"
"ஆமா...நீங்க யாருங்க...?"
"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."
"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."
"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?
ஒத்தை கால் மண்டபம்,ஒத்