என் சுவாசம் அவள்

இந்த இருள் சூழ்ந்த இரவு
என்னை உறங்க அழைக்கிறது..
ஆனால்,
என் உள்ளமோ உறங்க மறுக்கிறது..

இமைகள் மூடிக் கிடந்தாலும்!
உயிர் முழித்து கிடக்கிறது!
உன் பெயர் சொல்லி கண்ணீர் வடிக்கிறது!

உன்னை கனவில் மட்டும்
காதல் கொள்கிறேன்..
காலை கண் விழித்ததும்
காயம் கொள்கிறேன்..
உன் நினைவால்!

நேசம் கொண்டவர்களின் நினைவுகள்
மனதில் ஓடிக்கொண்டே தான் இருக்கும்
உன் நினைவுகளை நிறுத்த வேண்டுமெனில்
என் சுவாசத்தை நிறுத்த வேண்டும்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (12-Sep-19, 12:51 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : en suvaasam aval
பார்வை : 2512

மேலே