நீ வாழும் என் இதய கூடு 555

என்னுயிரே...
அதிகாலையில் வாசலில் நீ
வரைந்த வண்ண கோலத்தை...
யாரேனும் தெரியாமல்
அழித்துவிட்டால்...
உன் உள்ளம்
துடித்து விடுகிறாய்...
என் இதயத்தில் நீ பதித்து
சென்ற பாதசுவட்டினை...
நானும் அழியாமல்
பாதுகாக்கிறேன்...
துடிக்கும் என் இதயத்தின்
ஓசை
உனக்கு கேட்கவில்லையா...
நீ வாழ்ந்து சென்ற
என் இதயக்கூட்டில்...
உன்னையன்றி யாருக்கும்
எப்போதும் இடமில்லையடி கண்ணே.....