சிகப்பு ரோஜா
சிகப்பு ரோஜாவே உன் மெல்லிய இதழ்கள்தான்
என் காதலியின் குணமே
உன் வாசம் தான் என் காதலியின் புன்னகையே
உன்னிலிருக்கும் தேன் தான் என் காதலியின் வார்த்தைகளே
உன் மேனியின் நிறம்தான் ரத்தத்தின் நிறமே
ரத்த ஓட்டம் இல்லையென்றால் உயிர் இருக்காதே - அதுபோலத்தான்
காதலி நீ இல்லையென்றால் காதலன் என் உயிர் இருக்காதே
என்று உணர்த்தவே உன்னை என் காதலிக்கு பரிசாக கொடுக்கிறேன் !!!