நானொரு பூக்காரன்

மரக்கிளையில் அமர்ந்து
கூவும் குயில் உன் குரலை
நினைவுப்படுத்திக்
கொண்டே இருக்கிறது!

உன் பார்வையானது
சுடுகின்ற வெயில்
குளிர்கின்ற பனி-என்னை
நனைக்கின்ற மழை!

நீ சூடிக்கொள்ளவே
பூக்களைத் தொடுத்து
காத்திருக்கும்
நானொரு பூக்காரன்!

நடந்து சென்ற பாதையில்
எனக்காக எதையும்
விட்டுச்செல்வதில்லை நீ!
உன் பாத சுவடைத் தவிர!

என் ஏக்கங்களெல்லாம்
மலைபோல்
வளர்ந்திருக்கிறது!நீயுன்
பாதம் பதித்து ஒரு
இதழ் முத்தம் கொடு!
உழத்தகுந்த வயல்வெளி
ஆகுமது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (11-May-18, 2:07 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 106

மேலே