பெண்ணே ரௌத்திரம் பழகு
ரௌத்திரம். .....பழகு !
- - - - - - - - - - - - - - - - - - - -
மென்மையில் புவிதழ்
மேன்மையில் சிகரம்
தண்மையில் அருவி
தவிர்ப்பில் தாமரையிலை
எரிப்பதில் தணல்
கரிப்பதில் எண்ணெய்
நிமிர்வதில் மரம்
தாழ்வதில் கடல்
சுடுபட்ட தங்கம்
அடிபட்ட வைரம்
எழுதப்பட்ட புத்தகம்
வடிக்கப்பட்ட பாத்திரம்
பொறுமையில் பூமி
புன்னகையில் நிலவு
நிறுவுகையில் வானம்
நெருப்பில் மழை
கற்பில் கண்ணகி
காதலில் தமயந்தி
வாழ்க்கையில சாவித்திரி
வம்சத்தில் சந்திரமதி
அணைப்பில் தாய்மை
வனப்பில் வாய்மை
குணத்தில் புலமை
இனத்தில் பெண்மை
இருக்காதா பின்னே
ரௌத்திரம்
பழகு என்று
ஏனிதற்கு சூத்திரம் !
- பிரியத்தமிழ் -