சுகம் தானே...!!!
கடல் அலையாய்
இரண்டொரு
நொடிகள்
காதலின்
பாதம்
தொடுவது
சுகம் தானே....!!!
வண்ணப் பொட்டாய்
அவள் நெத்தியில்
முத்தமிட்டு
ஒட்டிக் கிடப்பது
சுகம் தானே....!!!
வாடிய பூவானாலும்
அவள் சூடிய பூ நான்
என்றால்
சுகம் தானே.....!!!
வெட்டி எறியும்
நகமானாலும்
அவள் விரலால்
வெட்டுண்டு
வீழ்வது
சுகம் தானே....!!!
சுகம் தானே!!!
சுகம் தானே!!!
காதலியின்
நினைவுகளும்
சுகம் தானே....!!!
காதலியின்
நினைவில்
வாழ்வதும்
சுகம் தானே....!!!
சுகம் தானே...!!!
சுகம் தானே....!!!
காதலிக்காக
வாழ்வதும்
சுகம் தானே.....!!!
காதலிக்காக
வீழ்வதும்
சுகம் தானே......!!!
காதலுக்காக
வாழ்வதும்
சுகம் தானே.....!!!
வீழ்வதும் சுகம் தானே....!!!