பெண்ணே பெண்ணே
பள்ளிசெலினும் பசுமாட்டை மறவாப் பெண்ணே
பண்பிதுதான் பேர்சொல்ல வைக்கும் உன்னை,
உள்ளம்நிறை அன்புடைய பசுவைப் பேணல்
உன்வாழ்வின் வழிகாட்டி யாவதைப் பாராய்,
கள்ளமில்லை கபடமில்லை கன்றுக் கூட்டும்
கருணையது உன்வாழ்வின் வழியைக் காட்டும்,
எள்ளளவும் வெறுப்பின்றி இதையே செய்வாய்
ஏற்றமுந்தன் வாழ்விலுண்டு காண்நீ பெண்ணே...!