காதலின் மாற்றம்
காதலின் மாற்றம்
கவிதை கவிதையாய் எழுதிய காலங்களை கடந்து
அலை அலையாய் பேச துடிக்கிறேன்...
நொடி நொடியாய் நிமிடங்களை இரசித்து
மணி மணியாய் நாட்களை கடக்க நினைக்கிறேன்...
உன்னுடன் பேசி கொண்டே...
அலாரம் வைத்து கண் விழித்தவன் நான்
அலாரத்திற்கு முன்னே கண் விழித்து பார்க்கிறேன்...
அலாரம் அடிக்கவில்லையா என்று...
அருகே ஒலிக்கும் அலைபேசியை கண்டாலே
எனது நெஞ்சம் படப்படக்கிறது...
அன்பே உன் அலைப்பின் ஒலியை கேட்டால் மட்டுமே
எனது இருதயமே துடிதுடிக்கிறது...
உலக நாட்டு நடப்பு என சுற்றி திரிந்தவன்
உன் நினைப்பாலே உன்னையே சுற்றி நிற்க்கிறேன்...
நீ சொல்ல இருக்கும் ஒரு வார்த்தைக்காக...
- த.சுரேஷ்.