பழிக்கு பழி
உங்கள் புற்றுகளை உடைத்து
என் வீட்டு
கோழி குஞ்சுகளுக்கு
உங்களை இரையாக்கினேன்.
அந்த பாவத்திற்க்குத் தான்
கரையான்களே நீங்கள்
என் கவிதைகளை எல்லாம்
அரித்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இந்த நன்றி கெட்ட கோழிகள்,
காலையில் கூவி என்
தூக்கத்தை கெடுக்கின்றன.