குடும்ப வன்முறை

சமூகத்திலுள்ள வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதாயில்லை,குடும்பத்தில் உள்ள வன்முறைகள்.இரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள் தான்.கூர் தீட்டப்பட்ட கத்திகளைப் போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன.அதன் வலி மிக அந்தரங்கமானது.ஆறாத ரணமுடையது.
கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள்,நகரங்கள் முழுவதும் எதிரொலிக்கக் கூடும்.வீடுகளுக்குக் கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டு பிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத் தான் இருக்க வேண்டும்.நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் நுழையாமல் பார்த்துக் கொள்வதை விடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன.
--கதா விலாசம் --எஸ்.இராமகிருஷ்ணன்

எழுதியவர் : படித்து பிடித்தது (29-Sep-15, 8:56 pm)
சேர்த்தது : அகர தமிழன்
Tanglish : kudumba vanmurai
பார்வை : 363

மேலே