கவிதைகள்

நல்ல கவிதைகள்
கண்ணில் பட்டால்
அது கண்ணுக்கு குளிர்ச்சி!
அவை மனதைத் துளைத்தால்
மனதிற்கு நெகிழ்ச்சி!
அழகான கவிதைகள்
சாமரம் வீசும் தேவதைகள்!
சில
இரவில் இதமான தூக்கம் கொடுக்கும்!
சில
சிந்தனையை கிள்ளிவிட்டு
தேவையில்லாத தூக்கத்தை தூர விரட்டும்!
சில இன்பத்தை
மழையாய் பொழியும்....
சிலதின் தாக்கத்தால்
சோகம் கூட
முழுதாய் ஒழியும்....
கவிதைகளை
படைப்பதும், படிப்பதும்
தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதால்
வேறென்ன வேண்டும் வாழ்வில்...
சோறு தண்ணி கூட வேண்டாமே...!!!