குரு

யார் தவறினாலும்
இவர் தவறுவதில்லை
எந்நாளும் வகுப்பறையை...

கட்டடம் கட்டுபவர் முதல்
கப்பலோட்டி வரை
கருத்தாய்க் கவனமாய்க்
கட்டமைப்பவர்...

தன் ஏழ்மையிலும்
தன் கட்டமைப்பின்
உயரத்தால் உவகை கொள்பவர்....

தர வரிசையில்
தாய் தந்தைக்குப் பின்
கடவுளுக்கும் முன்
குருவாகி நிற்பவர்....

வாழ்க்கை தந்து
வளைந்து என்றும்
வாழ்த்தி நிற்பவர்....

எழுதியவர் : க.நஞ்சப்பன் (30-Sep-15, 12:56 pm)
Tanglish : guru
பார்வை : 100

மேலே