தமிழர்களும் தற்காப்பு கலையும்

தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ,சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. சிலம்பம், வர்மக்கலை, குத்துவரிசை, அடிதடி, மல்லாடல்ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.

போதி தருமன்

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார்.

போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யதில் கந்தர்வன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாக பிறந்தவர்.
இவர் தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே .கட்டுரையின்படி இவர்தான் மூச்சு பயிசியும், யோகாவும் கற்று கொடுத்தார் என்பதால் சீனர்களுக்கு முன்பே
நாம் இக்கலையில் தேர்ந்திருந்தோம் என்பது உறுதி.

வர்மக்கலை
வர்மக்கலை சித்தர்கள் எனும் சிவனடியர்களால் தற்காப்பு கலைக்கும் ,
மருத்துவ உத்திகளுக்கும் கண்டறிந்தனர் .
வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ
உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில்
உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக்
கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:
ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுற உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தைஎந்தக் கட்டும்போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாக சரிசெய்துவிடமுடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழேவீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

சிலம்பம்

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும்தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக்கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.

சிலம்பாட்ட அடிமுறைகள்

தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில் திருவிழாக்களில்மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது.

யோகக்கலை

இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது "யோகாசனம்" ஆகும்.
இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது.

ஜல்லிக்கட்டு

நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியிலும், ஏராளமான சர்ச்சைகளுக்கு நடுவிலும், காளைகளும்,காளையர்களும் மோதிக்கொள்ளும் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகப்பெரும் வீர விளையாட்டாகவே கருதப்படுகிறது.

இளவட்டக்கல்:

சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு

எழுதியவர் : செல்வமணி - இணையம் (1-Oct-15, 8:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 4737

சிறந்த கட்டுரைகள்

மேலே