இனி வேண்டும் நீ இங்கே
இருதயத்தின் ஓசைகள்
அவன் பெயரையே
இசை மீட்க
இருள் படிந்த பொழுதெல்லாம்
அவன் விழி வழியே
ஒளி பெற,
விடிந்ததுவோ,..
இவள் நாட்கள் ,
அவன் மெய் தழுவியே
உயிர் ஆகிட!
குரல் கேட்டு
இவள் மயங்கிட
அந்த நொடிபோதும்
மனம் கனிந்திட...
விழி பார்த்து
அவன் பேசிட
அதன் கதிர் தாங்கும்
இவள் உயிரினை!
கனவுக்குள் அவன் கலந்திட
நான் உறக்கத்தை
தினம் விரும்பினேன்...
கனவாகவே அவன் கலைந்தால்
உறக்கத்தையே எனக்கு
உயில் எழுதுவேன்!
இனி வேண்டாம்
இடைவெளி அன்பே...
உன் மடி வேண்டும் - இவள்
சாய்ந்திட இங்கே...
இனி வேண்டாம்
துயரங்கள் கண்ணே...
உன் தோள் வேண்டும் - இவள்
தூங்கிட இங்கே!